விசுவாசத்தில் வாழ்க்கை கீதங்கள்

Youtube இணையத்தளத்தில் பாடல்களை கேட்டு மகிழுங்கள்

Facebook

தினமும் தேவசெய்திகளை படிக்க எங்களது முகநூல் பகுதிக்கு வரவும்

Friday, 28 March 2014

ssss

<div id="cp_widget_4572e51d-c2a5-4f57-876a-c03adcd8f37c">...</div><script type="text/javascript">
var cpo = []; cpo["_object"] ="cp_widget_4572e51d-c2a5-4f57-876a-c03adcd8f37c"; cpo["_fid"] = "A4AAGg7o1nGK";
var _cpmp = _cpmp || []; _cpmp.push(cpo);
(function() { var cp = document.createElement("script"); cp.type = "text/javascript";
cp.async = true; cp.src = "//www.cincopa.com/media-platform/runtime/libasync.js";
var c = document.getElementsByTagName("script")[0];
c.parentNode.insertBefore(cp, c); })(); </script><noscript>Powered by Cincopa <a href='http://www.cincopa.com/video-hosting'>Video Hosting</a> solution.</noscript>

songs

...

VV M

poto

...

Tuesday, 25 February 2014

Sample Post

ஐசுவரிய ஆசீர்வாதம்

அவர் (அவர்) ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே. II கொரி 8:9

புதிய வருடத்தில் அநேக ஆசீர்வாதமான வசனத்தை கேட்டிருப்போம். இயேசு கிறிஸ்துவைக் குறித்து பவுல் அடியார் சொல்கிறார், “நாம்ஐசுவரியவான்களாகும்படிக்கு, இயேசு தரித்திரரானார்” என்று. நாம்ஐசுவரியவான்களாகும்படிக்கு இந்த உலகத்தில் வந்த இயேசு உலக ஆசீர்வாதங்களையும், ஐசுவரியங்களையும் குறித்து பேசாமல், பரலோகதின் ஆசீர்வாதங்களை குறித்தே போதித்தார். “பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” என்றார். மேலும் “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு6:20&33) என்றும் கூறினார்.

ஆசீர்வாதங்கள் நமது வாழ்க்கையில் அவசியம்தான். ஆனால் நாம் தேவனுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை நாடி அங்கே நமது பொக்கிஷங்களை சேர்க்க வேண்டும். நினைத்து பாருங்கள் நாம் வாழும் உலகத்தில் நமக்கு ஆசீர்வாதம் வேண்டுமென பிரயாசப்படுகிற நாம், பரலோகத்தில் நமக்கு பொக்கிகிஷங்களை சேர்த்துவைக்க ஆசைப்பட்டுளோமா?. “தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே” (II கொரி 1:20). பழைய ஏற்பாட்டில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு அருளிய வாக்குகள் நமது வாழ்க்கையில் நிறைவேற, முதலாவது பரலோக ராஜ்யத்தையும் அதின் நீதியையும் தேட வேண்டும். இயேசு ஏற்கனவே கடந்த வருடங்களில் நம்மை ஆசீர்வதித்திருகின்றார். அதை வைத்து நாம் பரலோக ராஜ்யத்தில் நமக்கென பொக்கிஷங்களை சேர்த்து வைத்துள்ளோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்தாக வேண்டும். பரலோக ராஜ்யத்தை தேடாமலும், அங்கு நமக்கு பொக்கிஷங்களை சேர்க்காத பட்சத்தில் உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காக நாடி ஓடுவதால் யாருக்கு என்ன பயன்.